இஸ்ரேல் நகரில் பயங்கரவாத தாக்குதல்: கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் வரை படுகாயம்
இஸ்ரேலிய நகரில் நடந்த பயங்கரவாதியின் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் வரை படுகாயமடைந்து தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் கத்திக்குத்து தாக்குதல்
இஸ்ரேலின் ஹடேரா(Hadera) நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 6 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அதில் 2 பேரின் நிலைமை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
கூடுதல் தகவல்கள் எதுவும் குறிப்பிடாமல் கிட்டத்தட்ட 4 இடங்களில் நடந்து இந்த கத்திக்குத்து வன்முறை சம்பவம் அரங்கேறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று, சம்பந்தப்பட்ட பயங்கரவாதி கொல்லப்பட்டு இருப்பதாகவும் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
மேலும் தாக்குதலுக்கு காரணமான நகரை அதிகாரிகள் எதிர்கொள்ளும் சிறிய வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் மற்றும் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையிலான சண்டை ஆகியவற்றிக்கு பிறகு இஸ்ரேல் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |