அமெரிக்காவை அச்சுறுத்தும் மில்டன் சூறாவளி: 2 மில்லியன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் மில்டன் சூறாவளி காரணமாக சுமார் 2 மில்லியன் மக்களுக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையை கடந்த மில்டன் சூறாவளி
வலுவான சூறாவளியாக கருதப்படும் மில்டன் சூறாவளி(Hurricane Milton ) புளோரிடாவின்(Florida) சரசோட்டா நகருக்கு(Sarasota) தெற்கே 5 மைல் தொலைவில் உள்ள சியஸ்டா கீ(Siesta Key) அருகே 3ம் பிரிவு புயலாக கரையை கடந்துள்ளது.
மில்டன் சூறாவளி புளோரிடா கரையை கடக்கும் முக்கிய தருணத்தை செயற்கைக்கோள்கள் வீடியோ படம் பிடித்துள்ளது.
Hurricane Milton makes landfall near Siesta Key, Florida as a Category 3 storm. pic.twitter.com/gXIRkCy6st
— CIRA (@CIRA_CSU) October 10, 2024
மேலும் இந்த வீடியோவை வளிமண்டல ஆராய்ச்சிக்கான கூட்டுறவு நிறுவன அமைப்பு வெளியிட்டுள்ளது.
2 மில்லியன் மக்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் மில்டன் சூறாவளி காரணமாக சுமார் 2 மில்லியன் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், தம்பா மற்றும் கிளியர்வாட்டரில் வசிப்பவர்களுக்கு தேசிய வானிலை சேவை உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தம்பா மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஏற்கனவே வெள்ளம் சூழ்ந்துள்ளது, இங்கு 10 முதல் 14 அங்குல மழை பொழிந்து இருப்பதாக எச்சரித்துள்ளது.
Wind is absolutely ferocious right now in Tampa. pic.twitter.com/KfFyfDpaO4
— Matt Lavietes (@mattlavietes) October 10, 2024
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், “ உயரமான இடத்திற்கு இப்போதே செல்லுங்கள், இந்த நிலைமை உயிருக்கு மிகவும் ஆபத்தானது மற்றும் மோசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |