நிலக்கரி சுரங்கத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு: பிரபல நாட்டில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வு
நியூசிலாந்து பொலிஸார் பேரழிவு ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மனித எச்சங்களை கண்டுபிடித்தனர்.
நவம்பர் 2010-ல் தெற்கு தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள பைக் நதி (Pike) சுரங்கத்தின் வழியாக மீத்தேன் வாயு மூலம் ஏற்பட்ட தொடர் வெடிப்புகளில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
பேரழிவாக கருதப்படும் அந்த விபத்தில் இருந்து 2 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது.
சம்பவத்திற்கு பிறகு, பாதுகாப்புக் காரணங்களால் சுரங்கம் மூடப்பட்டு பல ஆண்டுகளாக உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டது.
Photograph: Reuters
சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பங்களின் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இறுதியில் 2019-ல் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை அணுக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த வார இறுதியில் சுரங்கத்தில் ஆழமான தேடுதலின் போது எடுக்கப்பட்ட படங்கள் இரண்டு உடல்கள் இருப்பதை உறுதி செய்ததாகவும், மேலும் ஒரு உடல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், எச்சங்கள் சுரங்க நுழைவாயிலில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால் மீட்க முடியவில்லை.
"எச்சங்களை எங்களால் அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க தடயவியல் நிபுணர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று துப்பறியும் கண்காணிப்பாளர் Peter Read கூறினார்.
எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் 6 முதல் 8 பேர் வேலை செய்ததாக புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள், அவர் மேலும் கூறினார்.