வணிக வளாகத்திற்கு அருகே மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் மக்கள்!
பிரித்தானியாவில் வணிக வளாகத்திற்கு அருகே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் Stoke-on-Trent பகுதியில் பரபரப்பான வணிக வளாகத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் பொதுமக்களில் ஒருவர் மனித எலும்புக்கூடுகளை கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த கண்டுபிடிப்பு குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.
உறுதிப்படுத்திய பொலிஸார்
எட்ரூரியாவில்(Etruria) உள்ள ஃபெஸ்டிவல் பூங்காவிற்கு(Festival Park) அருகில் உள்ள இடத்தில் ஸ்டாஃபோர்ட்ஷயர்(Staffordshire) காவல்துறை சுமார் 3:40 மணிக்கு சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், "கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் மனிதனுடையது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இருப்பினும், முறையாக அடையாளம் காணப்படவில்லை" என்று தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |