கிலோ கணக்கில் குளிர்சாதன பெட்டியில் மனித இறைச்சி! நரபலி சம்பவத்தில் அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என ஆசைகாட்டிய ஷஃபி
லட்சக்கணக்கில் சம்பாதிக்க மனித இறைச்சியை விற்கலாம் என ஷஃபி கூறியதை பகவல் சிங், லைலா தம்பதி நம்பியுள்ளனர்
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் பொலிஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் கேரளா மாநிலத்தில் ரோஸ்லின், பத்மா என்ற இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடரில் பகவல் சிங், லைலா என்ற தம்பதியும், மந்திரவாதி முகமது ஷஃபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட இரண்டு பெண்களையும் வைத்து நிர்வாண பூஜை நடத்தியதும், அதன் பின்னர் அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டதாகவும் தெரிய வந்தது.
பின்னர் அவர்களின் உடல்களில் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து சில உடல் பாகங்களையும், நரமாமிசத்தையும் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த நிலையில் நரமாமிசத்தை மீட்ட பொலிஸார், அவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் ஷஃபியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்க்கரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷஃபி பேஸ்புக் மூலமாக பகவல் சிங்கை முதலில் தொடர்புகொண்டுள்ளார். அதன் பின்னர் செல்வம் பெருக பூஜைகள் நடத்த வேண்டும் என்று கூறிய அவர், சிறிது சிறிதாக அந்த தம்பதியிடம் ஆறு லட்சம் வரை வாங்கியுள்ளார். பின்னர் பணத்தை அந்த தம்பதி திரும்ப கேட்டபோது, நரபலி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார் ஷஃபி.
அதனை நம்பிய பகவல் சிங் - லைலா தம்பதி அவர் சொன்னபடி கேட்டு நடந்துள்ளனர். இரண்டாவது நரபலி கொடுத்த சமயத்தில் மனித இறைச்சியை தனித்தனியாக விற்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஷஃபி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதன் பிறகே நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர். ஆனால், அதனை வாங்க ஆள் வராததால் இறைச்சியை குழி தோண்டி புதைத்துள்ளனர்.