மனிதகுலத்தின் முடிவு எப்போது தொடங்கும்... பாபா வங்கா கணித்துள்ள ஆண்டு இது தான்
மனிதகுலத்தின் முடிவு நெருங்கிவிட்டதாக பாபா வங்கா கணித்திருந்த நிலையில், அதன் தொடக்கம் எப்போது என்பது தொடர்பில் பிரதான தகவல் ஒன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிகுந்த கவலையை ஏற்படுத்தும் தகவல்
பல்கேரிய நாட்டவரான பாபா வங்கா கால் நூற்றாண்டு முன்பு மரணமடைந்துள்ளார். ஆனால் அவர் கணித்துள்ள பல விடயங்கள் தற்போதும் நிறைவேறி வருகிறது.
சிறுமியாக இருக்கும் போது கண் பார்வையை இழந்த பாபா வங்கா, திடீரென்று உலகில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் தீர்க்கதரிசனங்களை வெளியிடத்தொடங்கினார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுதல் உட்பட அரசியல், தனிமனித இழப்பு, பேரிடர் என அவர் கணித்துள்ள பல சம்பவங்கள் நிறைவேறியுள்ளது.
தற்போது அவர் கணித்துள்ள மிகுந்த கவலையை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, 1996ல் மரணமடைந்துள்ள பாபா வங்கா, 5079ல் மனிதகுலம் மொத்தமாக அழியும் என்பதை கணித்துள்ளார்.
ஆனால் அதன் தொட்டக்கம் எப்போது என்பதை அவர் கணித்துள்ள ஆண்டு தான் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மனிதகுலத்தின் அழிவு 5079ல் என்றாலும், அதன் தொடக்கம் 2025ல் தொடங்கும் என்றே பாபா வங்கா கணித்துள்ளார்.
இன்னும் 1,200 ஆண்டுகளுக்கு
அதுவும் ஐரோப்பாவில் ஒரு பெரும் மோதல் வெடிக்கும் என்றும், இதனால் அந்த கண்டத்தின் மக்கள்தொகையில் பெரும்பகுதி அழிவை எதிர்கொள்ளும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, உயிர்கள் வாழ இயலாத அளவுக்கு வெப்பக்காடான வீனஸ் கோளுக்கு மனிதர்கள் 2028ல் பயணிப்பார்கள் என்றும், 2033 ஆம் ஆண்டில் துருவ பனிக் கட்டிகள் உருகி, கடல் மட்டத்தில் பெரும் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும்,
இவை அனைத்தும் 2076 இல் கம்யூனிசத்தின் மீள் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். அத்துடன் 2130ல் வேற்றுகிரவாசிகள் நேரிடையாக பூமியுடன் தொடர்பு கொள்வார்கள் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
2170-ல் உலக அளவில் வறட்சி ஏற்படும் என்றும், பின்னர் 3797 இல் பூமியின் அழிவு தீவிரமடையும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். இதனால் மனிதகுலத்தின் மொத்த வீழ்ச்சி என்பது இன்னும் 1,200 ஆண்டுகளுக்கு ஏற்படாது என்பதே நிம்மதியான தகவல் என சமகால ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |