பிச்சை எடுக்கும் ரோபோ... ஒரு வைரல் வீடியோ
சீனாவில் ரோபோ ஒன்று பிச்சை எடுக்கும் காட்சியைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
பிச்சை எடுக்கும் ரோபோ...
அந்த ரோபோ, தெருவோரமாக முழங்காலில் நின்று பிச்சை கேட்பதுடன், QR குறியீடு மூலமும் தனக்கு நன்கொடை கொடுக்கலாம் என்கிறதாம்.
Robot spotted BEGGING for money in China
— RT (@RT_com) June 13, 2026
AI takeover on hold for now pic.twitter.com/eyd7Ub4eVo
வீடியோவைப் பார்வையிட்ட ஒருவர், ரோபோக்களுக்கும் வேலை உத்தரவாதம் இல்லை, அவைகளும் தெருக்களில் பிச்சை எடுக்கத் துவங்கிவிட்டன என்று கூற, அவரது கருத்து அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
விடயம் என்னவென்றால், அந்த ரோபோவை நிச்சயம் ஒருவர் ப்ரோக்ராம் செய்திருக்கவேண்டும். அது ஏதாவது விளம்பரத்துக்காகவோ அல்லது ப்ராஜக்டுக்காகவோ, பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காகவோ, வேடிக்கைக்காகவோ கூட இருக்கலாம். என்றாலும், அந்த வீடியோ மக்களை கொஞ்சம் யோசிக்கவைத்துவிட்டது.

தொழிற்சாலைகளில், பல்வேறு நிறுவனங்களில் மக்களுடைய வேலைகளை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்கள் பறித்துக்கொண்டுவரும் நிலையில், இந்தக் காட்சி, நாளை ஒரு விடயம் மட்டும் நிச்சயம் என யோசிக்க வைத்துள்ளது.
அதாவது, இவ்வித ரோபோக்களை அன்றாட வாழ்வில் மக்கள் எதிர்கொள்வது சாதாரண வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிடக்கூடும் என்பதுதான் அது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |