இன்னும் சில மாதங்கள் போர் நீடித்தால்... புடினுக்கு தலைகுனிவு உறுதி
எதிர்வரும் பிப்ரவரி மாதத்துடன் ரஷ்யாவில் ட்ரோன் தடுப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறை ஏற்படும் என இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனுக்கு சாதகமாக
விளாடிமிர் புடினின் துருப்புக்கள் அந்த ஏவுகணைகளின் தயாரிப்புக்கு அவகாசம் அளிக்க முடியாத அளவுக்கு வேகமாகச் சுடுவதாக நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
ஏவுகணைகளின் பற்றாக்குறை ஏற்பட்டால், தடுப்பு நடவடிக்கைகள் சுருக்கப்படும், இதனால் சில இலக்குகள் உக்ரைனுக்கு சாதகமாக அமையும். இந்தப் பற்றாக்குறை பான்சிர் ஏவுகணைகளைப் பாதித்துள்ளது.
இதுவே எதிரிகளின் ட்ரோன்களை வேட்டையாட ரஷ்ய துருப்புகளின் நம்பிக்கையாக இருந்தது. மட்டுமின்றி, சமீபத்திய பெரும்பாலான இரவுகளில் ரஷ்யாவின் எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலைகளை உக்ரைன் ட்ரோன்களால் சேதப்படுத்தி பெட்ரோல் விலையை அதிகரிக்க செய்த நிலையிலேயே தற்போது ஏவுகணை பற்றாக்குறையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிட்டத்தட்ட தீர்ந்துவிடும்
ஏவுகணை உற்பத்தியை பெருக்க ரஷ்யா போராடி வந்தாலும், தேவையை பூர்த்தி செய்ய பல மாதங்களாகலாம் என்றே பிரித்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய போக்குகளின் அடிப்படையில் அவை பிப்ரவரி மாதத்திற்குள் கிட்டத்தட்ட தீர்ந்துவிடும் என்றே பாதுகாப்பு நிபுணர்கலின் கருத்தாக உள்ளது. ஆனால், S300 மற்றும் S400 அமைப்புகளுக்கான ஏவுகணையில் பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |