பிரதமர் சன்னா மரினுக்கு ஆதரவாக களமிறங்கிய பின்லாந்து பெண்கள்! பார்ட்டியில் நடனமாடும் வீடியோக்கள் பகிர்வு
பெண்கள் நடனமாடுவதையும் மகிழ்வதையும் காட்டும் திரைப்படங்களின் மீம்ஸ்கள் SolidarityWithSanna என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் பகிரப்பட்டன.
ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு ஆதரவைக் காட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் சொந்த வீடியோக்களைப் பகிர்ந்துள்ளனர்.
ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின் நடனமாடும் வீடியோ வைரலாகி, குடிமக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதை அடுத்து, நூற்றுக்கணக்கான ஃபின்னிஷ் பெண்கள் பிரதமருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் நடனமாடுவது மற்றும் பார்ட்டி வைப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
36 வயதான சன்னா மரின் தனது செயல்களுக்காக விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில், தான் செய்ததெல்லாம் நடனமாடுவதும், பாடுவதும், தன் நண்பர்களுடன் மகிழ்வதும் மட்டுமே, மற்றபடி போதைப்பொருட்களை உட்கொள்ளவில்லை என கூறினார்.
அவர் கூறினார், "2022-ஆம் ஆண்டில் முடிவெடுப்பவர்கள் கூட நடனமாடுவது, பாடுவது மற்றும் விருந்துகளுக்குச் செல்வது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
தன்மீது குற்றம் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Political leaders do party.
— Mélanie Vogel (@Melanie_Vogel_) August 19, 2022
They also get drunk sometimes, snore, fall down, laugh, stain their clothes, dance, puke.
They are human being. Get over it.
Full support to @MarinSanna. pic.twitter.com/SUNY9L4UXw
இந்நிலையில், ஃபின்னிஷ் பெண்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அவர்கள் பார்ட்டி நடத்தும், மது அருந்தும் மற்றும் நடனமாடும் சொந்த வீடியோக்களையும் சமூகள வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ட்விட்டரில் #SolidarityWithSanna என்ற ஹேஷ்டேக்குடன் அவை பகிரப்பட்டன.
“Solidarity with Sanna”
— Megha Mohan (@meghamohan) August 20, 2022
Women in Finland are posting videos of themselves partying while tagging Prime Minister Sanna Marin. pic.twitter.com/Bl1M4r0bky
#solidaritywithsanna op Lowlands ? pic.twitter.com/V9KIZU8SGP
— Rixt van Dongera (@RixtvD) August 20, 2022
Dancing is healing. Keep dancing, @MarinSanna. Solidarity with Sanna. #letsdance #solidaritywithsanna #SannaMarin pic.twitter.com/7UXfRqIfJk
— Dr. Carolina Brum (@CoxaValgus) August 20, 2022