ஆப்கானில் தேசிய கொடியுடன் சாலையில் போராடிய இளைஞர்கள் மீது தலிபான்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு! வெளியான பரபரப்பு வீடியோ
ஆப்கானிஸ்தானின் தேசிய கொடிக்கு ஆதரவாக சாலையில் போராடி நூற்றுக்காணக்கான இளைஞர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்களை கைப்பற்றியதை தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய கொடி அகற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று Nangarha மாகாணத்தில் உள்ள Jalalabad நகரில், நூற்றுக்காணக்கான இளைஞர்கள் ஆப்கான் தேசிய கொடிக்கு ஆதவாக, கொடியை ஏந்திய படி சாலையில் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கான் தேசிய கொடியை மீண்டும் ஏற்றி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
அதாவது, தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானின் மூவர்ண தேசியக் கொடி மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், சாலையை மறித்து கொடியை பிடித்த படி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனார்.
جلال اباد ښار کې د ملي بیرغ په ملاتړ د ځوانانو لاريون
— ZAWIA NEWS (@ZawiaNews) August 18, 2021
عيني شاهدان وايي، چې طالبانو په لاريون کوونکو ډزې کړي، چې يو شمېر کسان پکې مړه او ټپيان شوي دي.#ZAWIANEWS pic.twitter.com/y8kDjSfifm
இதைக்கண்ட, தலிபான்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.
Residents of Nangarhar province today held the Afghanistan Islamic Republic flag and demonstrated in the streets. pic.twitter.com/MjFkcdNj3J
— Natiq Malikzada (@natiqmalikzada) August 18, 2021
Nangarha மாகாணத்தில் போராட்டகாரர்கள் மீது தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், ஆப்கானிஸ்தானின் Khost மாகாணத்திலும் தேசிய கொடியுடன் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.