ரஷ்யாவுக்கு எதிராக போரை அறிவித்த பிரித்தானியா, பிரான்ஸ்: ஹங்கேரி அமைச்சர் விடுத்த எச்சரிக்கை
அணுசக்தி கொண்ட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக நேரடி மோதலுக்கு தயாராகி வருவதாக ஹங்கேரி அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவும், பிரான்சும்
அணு ஆயுதங்களைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியாவும், பிரான்சும் ரஷ்யாவுக்கு எதிராக மறைமுக போரை அறிவித்து இருப்பதாக ஹங்கேரி வெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் சிஜார்டோ தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக போரை அறிவிக்காவிட்டாலும், இராஜதந்திர முறையில் மறைமுகமாக தூதர மொழியில் ரஷ்யாவுக்கு எதிராக போரை அறிவித்து நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன்- ரஷ்யா போரில் முன்வரிசையில் ஹங்கேரி அமைந்துள்ளது என்றும், பிரித்தானியாவும், பிரான்சும் தங்களை விருப்பம் இல்லாத போருக்குள் தள்ளுவதாகவும் அமைச்சர் பீட்டர் சிஜார்டோ தெரிவித்துள்ளார்.
ஹங்கேரி வெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் சிஜார்டோ இந்த கருத்துகளை ஹவர் ஆஃப் ட்ரூத்(Hours of Truth) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான உதவி
அதே சமயம் உக்ரைன் போர் விவகாரத்தில் ஹங்கேரி தன்னுடைய நீண்ட கால நிலைப்பாட்டை தொடர்வதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும், அதே சமயம் ஹங்கேரி மக்களின் வரிப்பணத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் பீட்டர் சிஜார்டோ தெளிவுபடுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |