நாடாளுமன்ற படிக்கட்டில் நடனமாடிய அமைச்சர்: பதவியேற்பு விழாவில் சுவாரஸ்யம்
ஹங்கேரியில் புதிய பிரதமராக பீட்டர் மக்யார்(Peter Magyar) பதவியேற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நடனமாடியது வைரலாகியுள்ளது.
ஹங்கேரியில் ஆட்சி மாற்றம்
ஹங்கேரியில் ஏப்ரல் 12ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பீட்டர் மக்யார்(Peter Magyar) தலைமையிலான Tisza கட்சி மொத்தமுள்ள 199 இடங்களில் 144 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்த விக்டர் ஓர்பினின் ஆட்சிக்கு இதன் மூலம் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 9ம் திகதி ஹங்கேரி நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நாட்டின் புதிய பிரதமராக பீட்டர் மக்யார்(Peter Magyar) பதவியேற்றுக் கொண்டார்.
நடனமாடிய அமைச்சர்
நாட்டின் புதிய பிரதமரான பீட்டர் மக்யாரின் புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஷோல்ட் ஹெக்டூஸ்(Zsolt Hegedus) பதவியேற்பு விழாவில் நடனமாடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The new government of Hungary after inauguration.
— SzabadonMagyarul 🇬🇧🇭🇺🇺🇦🇪🇺 (@SzabadonMagyar) May 9, 2026
Never been so cool to be Hungarian. pic.twitter.com/9B4f1P6opA
பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஷோல்ட் ஹெக்டூஸ் ஏற்கனவே அவரது தேர்தல் வெற்றி அறிவிப்பின் போது நடனமாடிய வீடியோ வைரலான நிலையில் தற்போது நாடாளுமன்ற படிக்கட்டுகளிலும் தனது துள்ளலான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர் ஷோல்ட் ஹெக்டூஸ் நடனமாடியதை கண்டு பிரதமர் மக்யார் மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |