ரஷ்ய எண்ணெய் தடைகளில் இருந்து விலக்கு வேண்டும்... ட்ரம்பை நாடும் ஐரோப்பிய நாடு
ரஷ்ய எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்க இருப்பதாக ஹங்கேரி தெரிவித்துள்ளது.
தடைகளிலிருந்து விலக்கு
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சமாதானப்படுத்த வேண்டும் என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகளிலிருந்து விலக்கு பெறுவதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், எண்ணெய் விடயத்தில் ஹங்கேரியின் குழாய் அமைப்புகள் சிக்கலாக உள்ளது என்றார்.
எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்புடன் திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பில் எண்ணெய் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஓர்பன் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீதான அமெரிக்கத் தடைகள் குறித்து ட்ரம்புடன் விவாதிக்க இருப்பதாக ஓர்பன் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஒருமித்த முடிவுக்கு
அத்துடன், அமெரிக்காவுடன் விரிவான பொருளாதார ஒப்பந்தங்கள் முன்னெடுக்கவும் ஹங்கேரி தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் ஒரு ரஷ்ய சார்புடையவர்,
மட்டுமின்றி ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமித்த முடிவுக்கு எதிராக செயல்பட்டு வருபவர். அத்துடன் இக்கட்டான சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் ஆதரவு முடிவுகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்துள்ளார்.

ஆனால் விளாடிமிர் புடின் விவகாரத்தில் ட்ரம்பின் நிலைப்பாடு தற்போது மாறியிருப்பதால், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ஓர்பான் ஏமாற்றமடையவே அதிக வாய்ப்பு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        