தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள்
மெலிசா புயல் சக்திவாய்ந்த வகை 5 சூறாவளியாக வலுப்பெற்றதை அடுத்து, வடக்கு கரீபியனில் பேரழிவு தரும் காற்று மற்றும் மழைக்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கட்டாயமாக வெளியேற்றும்
வடக்கு கரீபியன் தீவு நாடான ஜமைக்காவின் அரசாங்கம் தலைநகர் கிங்ஸ்டன் உட்பட நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மட்டுமின்றி, இரண்டு சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், 881 தங்குமிட வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜமைக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜமைக்காவின் பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், கிங்ஸ்டனில் உள்ள போர்ட் ராயல் மற்றும் ஓல்ட் ஹார்பர் பே உட்பட நாடு முழுவதும் உள்ள ஆறு பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் உத்தரவுகளை வெளியிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜமைக்காவின் கிங்ஸ்டனுக்கு தென்மேற்கே சுமார் 125 மைல்கள் தொலைவிலும், கியூபாவின் குவாண்டநாமோவிற்கு தென்மேற்கே சுமார் 310 மைல்கள் தொலைவிலும் மெலிசா புயல் மையம் கொண்டிருந்தது.
அதிகபட்சமாக மணிக்கு 145 மைல் வேகத்தில் காற்று வீசுவதுடன் மணிக்கு 5 மைல் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்தது, மட்டுமின்றி, ஜமைக்கா மற்றும் தெற்கு ஹிஸ்பானியோலா - ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு ஆகியவற்றில் மெலிசா புயலால் 76 செ.மீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200 பிரித்தானியர்கள்
இதனிடையே, ஜமைக்காவில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த குறைந்தது 200 பிரித்தானியர்கள், தற்போதைய நெருக்கடியான சூழலில் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அனைவரும் ஹொட்டல் ஒன்றில் சிக்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மெலிசா புயல் மிக ஆபத்தான வகை 5 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியர்கள் தொடர்பில் அச்சம் அதிகரித்துள்ளது.

முன்னதாக மெலிசா புயலானது டொமினிகன் குடியரசில் கிட்டத்தட்ட 200 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது மற்றும் நீர் விநியோக அமைப்புகளைத் தகர்த்துள்ளது, அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை நீடிக்கும் அட்லாண்டிக் சூறாவளி பருவத்தில் பெயரிடப்பட்ட 13வது புயல் மெலிசா என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |