கணவன் மனைவிக்கிடையே சண்டை: குறைபாடுள்ள பிள்ளையை முதலையிடம் வீசிய பெண்
தங்கள் பிள்ளைக்கு பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளதால் அது தொடர்பாக ஒரு கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், பிள்ளையை முதலை வாழும் கால்வாயில் வீசியுள்ளார் பெண்ணொருவர்.
பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட பிள்ளை
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள Dandeli என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர்கள் சாவித்ரி, ரவி குமார் தம்பதியர் (Savitri Kumar Shelle, 26, Ravi Kumar Shelle, 27). தம்பதியரின் மகன் வினோத், பேச்சுத்திறன் குறைபாடு கொண்டவன். மகனுடைய குறைபாடு காரணமாக தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதுண்டாம்.

Image: Getty Images/Image Source
தாய் செய்த பயங்கர செயல்
இம்மாதம், அதாவது, மே மாதம் 4ஆம் திகதியும், மகன் தொடர்பில் தம்பதியருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்ற, மகனைத் தூக்கிக்கொண்டுபோய் கால்வாயில் வீசியிருக்கிறார் சாவித்ரி.

Image: Getty Images
பிரச்சினை என்னவென்றால், அந்தக் கால்வாயில் முதலைகள் உள்ளன. பிள்ளையைத் தூக்கி வீசிவிட்டு, பின்னர் குய்யோ முறையோ என சாவித்ரி சத்தமிட, ஊரார் திரண்டதுடன் பொலிசாருக்கும் தகவலளித்துள்ளார்கள்.
பொலிசார் நீச்சல் வீரர்களுடன் சம்பந்தபட்ட கால்வாயில் தேடல் நடவடிக்கைகளைத் துவங்க, பிள்ளை கிடைக்கவில்லை. மறுநாள் காலை, பிள்ளையில் உடல் பாகங்கள் சில தென்பட, ஒரு முதலை பிள்ளையின் உடலுடன் நீந்திச் செல்வதை சிலர் பார்த்திருக்கிறார்கள். தம்பதியர் மீது பொலிசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

Image: Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |