பிரிந்து சென்ற மனைவியை தண்டிக்க 500கி கஞ்சாவை கையில் எடுத்த கணவர்: அம்பலமான சதி செயல்
பிரிந்து சென்ற மனைவியின் காரில் கஞ்சாவை வைத்த கணவனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகள் சிறை தண்டனை
மரண தண்டனை வழங்கப்படும் என்று தெரிந்தும் பிரிந்து சென்ற மனைவியின் காரில் கஞ்சாவை மறைத்து வைத்து அவரை கிரிமினல் குற்றத்தில் சிக்க வைக்க முயற்சி செய்த சிங்கப்பூரை சேர்ந்த Tan Xianglong என்ற 37 வயது கணவருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனையை நீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக பிரிந்து வாழும் இந்த தம்பதி, விவாகரத்துக்கு எதிர்பார்த்து இருக்கும் நிலையில் குறுகிய காலம் இணைந்து வாழ வேண்டும் என்ற விதியின் காரணமாக இருவருக்கும் உடனடி விவாகரத்து கிடைக்கவில்லை என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மனைவியை சிக்க வைக்க சூழ்ச்சி
பிரிந்து சென்ற மனைவி திருமண செலவில் எத்தகைய உதவியும் செய்யாததால் கோபமடைந்து இருந்த கணவர், உடனடியாக விவாகரத்து பெறுவதற்கான வழியை அவரது வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார், அவரும் இருவரில் யாரேனும் குற்ற பின்னணி கொண்டு இருந்தால் உடனடியாக விவாகரத்து கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனியார் துப்பறியும் அதிகாரியின் உதவியுடன் மனைவியின் தகாத உறவில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளார், ஆனால் இறுதியில் அவருக்கு அத்தகைய எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தனது மனைவிக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று தெரிந்தும் அவரது காரில் 510 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்துள்ளார்.
சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சாவை எடுத்து சென்றதாக குற்றம் நிருபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 500 கிராமுக்கு மேல் கஞ்சாவை காரில் வைத்து இருந்த குற்றத்திற்காக Tan Xianglong மனைவி பொலிஸாரால் கைது செய்யப்படுகிறார்.
ஆனால் காரில் கஞ்சா விநியோகம் அல்லது பயன்பாடு தொடர்பான எந்தவொரு ஆவணங்களும் இல்லாத நிலையில், பொலிஸார் விசாரணையை கணவர் Tan Xianglong-ஐ நோக்கி திருப்பினார்.
விசாரணையின் இறுதியில் மனைவியை சிக்க வைக்க கணவர் Tan Xianglong செய்த சதி செயல் வெளிச்சமடைந்தை தொடர்ந்து அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |