புலம்பெயர்ந்த பெண்ணை காதலித்து மணந்த நபர்! கொன்று புதைத்துவிட்டு நடத்திய நாடகம் அம்பலம்
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பெண்ணை காதலித்து மணந்த நபர் அவரை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடியது அம்பலமான நிலையில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிசோரியை சேர்ந்தவர் ஜோசப் எல்லட்ஜ் (26). சீனாவை சேர்ந்தவர் மெங்குயூ ஜி. இவர் கடந்த 2014ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
2015ல் ஜோசப்பும், ஜியும் சந்தித்து நட்பான நிலையில் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 2019 அக்டோபர் மாதம் தனது மனைவியை காணவில்லை என பொலிசில் ஜோசப் புகார் கொடுத்தார். இது தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதன்படி மனைவி ஜியுடன் ஏற்பட்ட சண்டையில் அவரை அடித்து கொலை செய்து உடலை ஜோசப் புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜோசப்பை பொலிசார் கைது செய்தனர், அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் ஜோசப்புக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும் தண்டனையில் 85 சதவீதத்தை அனுபவித்த பின்னரே அவர் பரோலுக்கு விண்ணபிக்க முடியும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.