நடுவானில் நடந்த கணவன், மனைவி சண்டை.., அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
பாங்காக் சென்று கொண்டிருந்த விமானத்தில் நடந்த கணவன், மனைவி சண்டையால் டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் சண்டை
லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் பயணம் செய்த கணவன் மனைவி இடையே திடீரென சண்டை ஏற்பட்டது. இதில், கணவர் மதுபோதையில் சண்டையிட்டதாகவும், சக பயணிகளை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.இதனால் விமானத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
தரையிறக்கப்பட்ட விமானம்
பின்னர், டெல்லி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "விமானத்தில் கணவன், மனைவி இடையே எதனால் சண்டை நடைபெற்றது என தெரியவில்லை. ஆனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மேலும், முதலில் பாகிஸ்தானில் விமானத்தை தரையிறக்க விமானி முயன்றுள்ளார். பின்னர், அங்கு தரையிறக்க அனுமதி நிராகரிக்கப்பட்டதால் டெல்லியில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, டெல்லி பொலிஸில் கணவர் ஒப்படைக்கப்பட்ட பின்பு, விமானம் பாங்காக் சென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |