கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்தியப் பெண்ணொருவர், தன் கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற நிலையில், வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற பெண்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாதைச் சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி, ஸ்ரீபதி தீபா (42) தம்பதியர் அமெரிக்காவில் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

இந்நிலையில், செவ்வாயன்று, தன் கணவரை ரயில் நிலையம் ஒன்றில் விட்டு விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார் தீபா.
அப்போது அவரது கார் மீது மற்றொரு கார் மோத, அந்த விபத்தில் தீபா உயிரிழந்துவிட்டார்.
விடயம் என்னவென்றால், தீபா இரண்டு நாட்களில் இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த விபத்து அவரை பலிவாங்கிட்டது.
விபத்தை ஏற்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |