பிரஷர் குக்கரால் அடித்து கொல்லப்பட்ட 50 வயது பெண்: ஹைதராபாத்தில் திருடர்களாக மாறிய வீட்டு வேலையாட்கள்
ஹைதராபாத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குக்கரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குக்கரால் அடித்து கொல்லப்பட்ட பெண்
ஹைதராபாத் மாநிலத்தின் சைபராபாத் என்று அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள “ஸ்வான் லேக் அபார்ட்மெண்ட்டில் 50 வயது ரேணு அகர்வால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரேணு அகர்வால் அவரது வீட்டில் கைகள் மற்றும் கால் கட்டப்பட்ட நிலையில், பிரஷர் குக்கரால் அடித்து தாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கத்தி மற்றும் கத்திரிக்கோலால் ரேணுவின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது கணவரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
திருட்டில் ஈடுபட்ட வீட்டு வேலையாட்கள்
இந்த கொடூர சம்பவத்தை அவரது வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் அரங்கேற்றி இருப்பதாக பொலிஸார் நம்புகின்றனர்.
குற்றவாளிகள் ரேணுவை கொலை செய்ததுடன் வீட்டில் இருந்த 40 கிராம் தங்கம், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், குற்றவாளிகள் தங்களின் ரத்தக்கரை படிந்த ஆடைகளை அங்கேயே கலைந்து விட்டு வேறு ஆடைகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் வீட்டின் முதலாளி ரெளஷனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தப்பியோடியவர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |