ரூ.50000க்கு வேலை: ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய பெண்: கண்ணீருடன் வீடியோ
ஹைதராபாத் சேர்ந்த பெண் ஒருவரை அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ஓமனில் சித்திரவதை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்ட பெண்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடி ஷெரீப் பகுதியை சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற 26 வயது இளம்பெண்ணுக்கு ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் ரூ 50,000 க்கு வேலை வாங்கி தருவதாக போலி ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர்.
போலி ஏஜெண்டின் ஆசை வார்த்தைகளை நம்பி கடந்த மார்ச் 26ம் திகதி ஷப்னம் ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சென்றதும் ஏஜெண்டுகளின் உண்மையான ரூபம் ஷப்னத்திற்கு தெரியவந்துள்ளது.

ஷப்னம் அங்கு வெவ்வெறு வீடுகளுக்கு வேலைக்காக 12 முதல் 15 மணி நேரம் எந்தவொரு ஓய்வும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு உண்ணுவதற்கு போதுமான உணவு, தங்குவதற்கு சரியான இடம் கூட கொடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஷப்னம் வேலை செய்ய மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த முதலாளிகள் அவரை கடுமையாக தாக்கியதோடு, வெளி உலகிற்கு தகவல் சொல்லி விட கூடாது என்பதற்காக அவரிடம் இருந்து மொபைல் போனையும் பறித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 4 மாதங்களாக அவருக்கு 1 ரூபாய் கூட சம்பளம் கொடுக்கவில்லை.
தூதரகத்தில் தஞ்சம்
இந்நிலையில், அங்கிருந்து எப்படியோ தப்பிய ஷப்னம், மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அடைந்துள்ளார். ஆனால் பாஸ்போர்ட் போன்ற எந்தவொரு ஆவணமும் அவரிடம் இல்லாததால் அவரால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை.
Urgent Appeal to Hon'ble Dr. @DrSJaishankar, Minister for External Affairs, Govt. of India
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) July 17, 2026
Mrs. Shabnam Begum, a resident of Pahadi Shareef, Hyderabad, was allegedly lured to Muscat, Oman by a local agent with the promise of a housemaid job offering 200 Omani Riyals/month. After… pic.twitter.com/UNrKXbv3QS
இதையடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த மஜ்லில் பச்சாவ் தெஹ்ரீக் கட்சி தலைவர் அம்ஜத் உல்லா கானுக்கு ஷப்னம் கண்ணீருடன் வீடியோ ஒன்றை அனுப்பி தன்னை மீட்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
இதனை தன்னுடைய X தளத்தில் மஜ்லில் பச்சாவ் தெஹ்ரீக் கட்சி தலைவர் அம்ஜத் உல்லா பகிர்ந்துள்ளார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஷப்னமை மீட்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், அவரை மீட்க மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |