தன்னுடைய கொலை வழக்கில் தானே ஆஜரான சிறுவனால் பரபரப்பு
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் விசித்திரமான கொலை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுவன் அபய் சிங்(வயது 11), இவரது தந்தை, சிறுவனின் தாத்தா மற்றும் மாமா மீது புகார் அளித்துள்ளார்.
இதனை வழக்காக பதிவுசெய்த பொலிசார், விசாரணையை தொடங்கினர், இதன்போது அலகாபாத் ஐகோர்ட்டில் நேரில் ஆஜரான சிறுவன் அபய் சிங், தான் இறக்கவில்லை என்றும், உயிருடன் இருப்பதாகவே வாக்குமூலம் அளித்தார்.
ஆனாலும் அது நிராகரிக்கப்பட்டது, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போதும் நேரில் ஆஜரானான்.
மேலும், தான் தாத்தா- பாட்டியுடன் வசித்து வருவதாகவும், பொலிசார் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வதாகவும் கூறியுள்ளான்.
இதனை கருத்தில் கொண்ட நீதிமன்றம், உத்தர பிரதேச அரசு, பிலிபித் போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் நியுரியா காவல் நிலைய உயரதிகாரி ஆகியோர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை சிறுவன் மற்றும் அவரது தாத்தா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பொலிசாரின் அடுத்த கட்ட விசாரணையில், வரதட்சணை கேட்டு அபயின் தாயை, கணவன் துன்புறுத்தி வந்ததும், 2013ம் ஆண்டு முதல் தாத்தா- பாட்டியின் அரவணைப்பில் அபய் இருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் அபயின் தாய் மரணமடைந்த பின்னர், அபயின் தாத்தா அவரது தந்தை மீது புகார் அளித்துள்ளார்.
இதற்கு பழிக்குபழி வாங்குவதற்காகவே பொய் புகாரை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.