மாற்றுத்திறன் கொண்ட தோழர்களால் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்கிறேன்- முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற மார்ச் 1ஆம் திகதி நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், மாற்றுத்திறன் கொண்ட தோழர்களால் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
வெளியிட்ட பதிவு..,
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட, “உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்” என நேற்று அறிவித்தேன்!
இன்று, மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, “நன்றி” என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன்! என்று கூறியுள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட, “உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்” என நேற்று அறிவித்தேன்!
— M.K.Stalin (@mkstalin) February 28, 2025
இன்று, மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, “நன்றி” என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக… pic.twitter.com/hicGkS2GEt
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |