அதானி பற்றி பேச மாட்டேன்.. பயப்பட வேண்டாம்! மக்களவையில் ராகுல் காந்தி
இந்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அதானி பற்றி பேச மாட்டேன்
மக்களவையில் பேசிய ராகுல் காந்தி,"மீண்டும் மக்களவையில் என்னை நியமனம் செய்ததற்கு நன்றி. இதற்கு முன்பு, நான் நாடாளுமன்றத்தில் அதானி பற்றி பேசினேன். அது சில மூத்த உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை.
ஆனால், இன்று நான் அதானி பற்றி பேச போவதில்லை. அதனால் நீங்கள் அச்சப்படாமல் இருக்கலாம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல இதயத்தில் இருந்து பேச போகிறேன்" என்றார்.
இன்னும் எனது யாத்திரை முடியவில்லை
இதனையடுத்து, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் சென்றது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி," நான் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கிய போது நாட்டையும், மக்களையும் பார்க்க எண்ணினேன்.
ஆனால், நான் தொடக்கத்தில் 8 முதல் 10 கிலோமீட்டர் வரை தான் யாத்திரை செய்தேன். இன்னும், எனது யாத்திரை முடிவடையவில்லை.
அப்போது, பயிர் காப்பீடு குறித்து விவசாயி ஒருவர் கூறியது எனக்கு அதிக வலியை ஏற்படுத்தியது. மக்களின் வலி என்னுடைய வலி. யாத்திரையின் போது பாடங்களை கற்றுக் கொண்டேன்" என்றார்.
மணிப்பூர் சம்பவம் நாட்டின் மீதான கொலை
மேலும் பேசிய ராகுல் காந்தி ."மணிப்பூருக்கு சில நாள்கள் முன்பு நான் சென்றிருந்தேன். ஆனால், மோடி இன்னும் மணிப்பூர் செல்லவில்லை. அவர் செய்யாததை நான் செய்தேன். மணிப்பூரை நீங்கள் இரண்டாக பிரித்து விட்டீர்கள்.
மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் உள்ள மக்களிடம் பேசிய போது,"தனது மகளை கண்முன்னே ஒருவர் கொன்றுவிட்டதாக" பெண் கூறினார்.
அங்கு நடந்து வரும் கலவரம் நாட்டின் மீதான கொலையாகும். அதுமட்டுமல்லாமல், மணிப்பூரில் பாஜக நடத்தி வரும் அரசியல் மணிப்பூரை மட்டுமல்லாமல் நாட்டையே கொன்றுவிட்டது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |