வங்கப்போரின் போது பிரதமராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன்! மோடி கூறும் முக்கிய விடயம்
வங்கதேச போரின்போது தான் பிரதமராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மோடி பேசியது
பஞ்சாபின் பாட்டியாலாவில் தனது முதல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், " வங்க போரின்போது தாம் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் வசமுள்ள கர்தார்பூர் குருத்வாராவை மீட்டு இருப்பேன்.
பஞ்சாப் மற்றும் சீக்கிய சமூகம் தேசியக் கட்டுமான முயற்சிகளில் முன்னணியில் இருக்கிறது" என்றார். குறிப்பாக அவர், கர்தார்பூர் குருத்வாராவின் பிரச்சனைகளை உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
குருநானக் தேவ் தனது வாழ்க்கயை கழித்த சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூர் குருத்வாராவை 70 ஆண்டுகளாக தாம் தொலைநோக்கியில் மட்டுமே தரிசனம் செய்வதாகவும் கூறினார்.
1971 -ம் ஆண்டில் நடைபெற்ற வங்க போரின்போது 90,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்தின் முன் சரணடைந்தனர்.
அப்போது, கர்தார்பூர் குருத்வாராவை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் தான் பிரதமராக இருந்திருந்தால் கர்தார்பூர் குருத்வாராவை மீட்டு இருப்பேன் என்று மோடி கூறினார்.
அதோடு, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானை காகித முதல்வர் என்று விமர்சித்துள்ளார். மேலும், பஞ்சாபில் மணல் கடத்தல், போதைப்பொருள் ஆகியவை ஆட்சி செய்வதால் அரசின் ஆணை செயல்படாது என்று ஆத்மி கட்சி ஆட்சியையும் சாடினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |