உண்மையாகவே அணுகுண்டு வீசிவிடுவேன்: உச்சி மாநாட்டின்போது மீண்டும் புடின் எச்சரிக்கை
செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் நடைபெற்ற பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி புடின், தனது நாடு அச்சுறுத்தப்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவேன் என மீண்டும் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது உரையின்போது, தான் அணுகுண்டு வீசுவேன் என உலகத்தை சும்மா மிரட்டவில்லை என்றும், தனது நாட்டைப் பாதுகாக்க, தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் புடின்.
பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாங்கள் சும்மா இருப்போமா? நாங்கள் அதற்கேற்ற வகையில் பதில் கொடுப்போம், உடனே, ரஷ்யா மிரட்டுகிறது என்கிறார்கள் என்று கூறும் புடின், நாங்கள் சும்மா மிரட்டவில்லை, எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும், அத்துடன், எங்கள் இறையாண்மையை பாதுகாக்க, அவசியமானால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.