ஆபரேஷன் சிந்தூரில் எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன? முதல்முறையாக அறிவித்த இந்தியா
ஆபரேஷன் சிந்தூரில் எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது என இந்தியா அறிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. ட்ரோன் மற்றும் விமானங்கள் மூலம் இரு நாடுகளும் தாக்கிக்கொண்டன.
4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இந்த தாக்குதலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.
இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பின.
இந்தியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால், அதனை மறுத்த இந்தியா ராணுவம், போர் என்றால் இழப்புகள் இருக்க தான் செய்யும் என கூறியது.
பாதுகாப்பு காரணங்களால் எத்தனை விமானங்களை இழந்தோம் என கூறி முடியாது என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானங்கள்
இந்நிலையில், எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என முதல்முறையாக இந்தியா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த விமான தளபதி எல்.எம்.கத்ரே நினைவு சொற்பொழ்வில் பேசிய இந்திய விமானப்படை தலைவர்(IAF) அமர் ப்ரீத் சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதில் பேசிய அவர், "பாகிஸ்தான் விமான படையின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு பெரிய AEW&C விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் வாங்கிய S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சிறப்பான பணியை செய்து, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |