இந்திய விமான படையின் விமானம் குளத்தில் விழுந்து விபத்து - உள்ளே இருந்தவர்களின் நிலை?
இந்திய விமான படையின் பயிற்சி விமானம், குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்திய விமான படையின் பயிற்சி விமானம் விபத்து
உத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

வித்யா வாகினி பள்ளியிலிருந்து (Vidya Vahini School) புறப்பட் மைக்ரோலைட் விமானம், கே.பி. கல்லூரி (KP College) அருகே பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமானத்தில் இருந்த ராணுவ வீரர்கள் மூவரும் பாரசூட் மூலம் பத்திரமாக கீழே குதித்தனர்.
VIDEO | Uttar Pradesh: A trainee aircraft has reportedly crashed into a water body in Prayagraj. Rescue operations underway. More details are awaited.#Prayagraj
— Press Trust of India (@PTI_News) January 21, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/r62ZjtoRhh
விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்சித்த போது விமானம் குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விமானம் விழுந்த சத்தம் கேட்ட அக்கபக்கத்தினர், உடனடியாக இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குளத்தில் விழுந்த விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமான விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |