இந்திய விமானப்படை ஓடுபாதையை விற்ற தாய், மகன்! அம்பலமான உண்மை
இந்திய மாநிலம் பஞ்சாபில் இந்திய விமானப்படை ஓடுபாதையை தாயும், மகனும் சேர்ந்து விற்றது அம்பலமாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் ஓடுதளம்
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே உள்ள ஃபட்டுவாலா கிராமத்தில் அமைந்துள்ளது இந்திய விமானப்படையின் ஓடுதளம்.
கடந்த 1997ஆம் ஆண்டு இந்த இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி நிஷான் சிங் என்பவர் அளித்த புகாரை ஆய்வு செய்தபோது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
வழக்குப்பதிவு
இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் போலி ஆவணங்களை தயார் செய்து தாய், மகன் சேர்ந்து விற்பனை செய்தது அம்பலமானது.
தற்போது டெல்லியில் வசிக்கும் உஷா அன்சால் மற்றும் நவீன் சந்த் அன்சால் ஆகியோரால், மோசடியாக IAFயின் இந்த நிலம் விற்கப்பட்டுள்ளது.
விசாரணையின்படி, குற்றம்சாட்டப்பட்ட அவர்கள் இருவரும், வருவாய் அதிகாரிகளின் ஒரு பகுதியினருடன் கூட்டு சேர்ந்து, வருவாய் பதிவேடுகளை போலியாக தயாரித்து நிலத்தின் உரிமையை ஏமாற்றி விற்றது அம்பலமாகியுள்ளது.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வினோத வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |