துபாயில் விபத்தில் சிக்கிய இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் - விமானியின் நிலை என்ன?
துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
துபாய் விமான கண்காட்சி
துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் 2025 ஆம் ஆண்டின் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இது, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விமான கண்காட்சி ஆகும்.
இதில் இந்திய விமான படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானம் வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. 2;10 மணியளவில் திடீரென கீழே விழுந்து விபத்தை சந்தித்துள்ளது.
தேஜாஸ் விபத்து
IAF’s Tejas Fighter plane crashed while flying in the Dubai Air Show 💔
— Roshan Rai (@RoshanKrRaii) November 21, 2025
There cannot be a worse accident than this.
Hope the IAF pilot somehow ejected 🙏🏻
Horrific.
pic.twitter.com/7pO2Nahfnn
இதில் விமானம் தீ பற்றி எரிந்து வருகிறது. விமானம் கீழே விழுந்ததும் பெருமளவில் தீ பற்றி, பெரும் கரும்புகை எழுந்துள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த தேஜாஸ், வெளிநாட்டு எஞ்சினுடன் கூடிய இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமாகும். தேஜாஸ் என்பது 4.5 தலைமுறை போர் விமானமாகும்.
An IAF Tejas aircraft met with an accident during an aerial display at Dubai Air Show, today. The pilot sustained fatal injuries in the accident.
— Indian Air Force (@IAF_MCC) November 21, 2025
IAF deeply regrets the loss of life and stands firmly with the bereaved family in this time of grief.
A court of inquiry is being…
இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறும் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |