மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய பெண் IAS அதிகாரி!
மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு அரசு பணி வழங்கியது குறித்து சர்ச்சையாக பேசிய பெண் IAS அதிகாரிக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
பெண் IAS அதிகாரி
இந்திய மாநிலமான தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றதும் முதன்முதலாக மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரேவந்த் ரெட்டிக்கு நற்பெயர் கிடைத்தது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரியான ஸ்மிதா சபர்வால் போட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது பதிவில், "ஏஐஎஸ் (AIS) எனப்படும் அகில இந்திய சர்வீஸ்களான ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் (IPS, IAS, IFS) பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு எதற்கு?
இந்த பணிகளில் மக்களின் இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும். இது ஒரு நீண்ட கால பணி. இதற்கு உடலானது ஒத்துழைக்க வேண்டும்.
விமானப் படையிலோ, ராணுவத்திலோ மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதேபோல தான் ஏஐஎஸ் பணியையும் கருத வேண்டும்" என்று கூறியிருந்தார்.
Union Budget 2024: 1 கோடி இளைஞர்களுக்கு Internship உடன் மாதம் ரூ.5000.., பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
வலுக்கும் கண்டனம்
இவரின் கருத்துக்கு மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்மிதா சபர்வாலின் கருத்து எங்களை அவமானத்துக்கு உள்ளாக்கியதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |