Champions Trophy-யில் விராட் கோலி படைத்த புதிய சாதனைகள்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது சாதனைகளின் பட்டியலில் இன்னுமொரு முக்கிய சாதனையை சேர்த்துள்ளார்.
ஐசிசி Champions Trophy போட்டிகளில், இந்திய அணிக்காக மிக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
தற்போது, 17-ஆவது Champions Trophy ஆட்டத்தில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கோலி இந்த சாதனையைப் பதிவு செய்தார்.
2013 முதல் 2017 வரை நடைபெற்ற போட்டிகளில் 10 ஆட்டங்களில் 701 ஓட்டங்கள் எடுத்த சிகர் தவானின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
சவுரவ் கங்குலி 13 போட்டிகளில் 665 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் முறியடித்தார்!
இந்தப் போட்டியில், கோலி தனது 74-ஆவது ஒருநாள் அரைசதத்தையும் பதிவு செய்தார்.
இதன் மூலம், ஐசிசி ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரராக சச்சின் டெண்டுல்கரை (23 அரைசதங்கள், 58 இன்னிங்ஸ்) முறியடித்து 24 அரைசதங்கள் (58 இன்னிங்ஸ்) விளாசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |