சர்வதேச மாணவர்களுக்கு Post-Study Work Visa வழங்கும் 10 நாடுகள்
உலகளவில் சர்வதேச மாணவர்களுக்கு படிப்பு முடிந்த பின் Post-Study Work Visa மூலம் வேலை அனுமதி வழங்கும் 10 நாடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
சர்வதேச மாணவர்கள் பல்வேறு நாடுகளில் உயர்கல்வி முடித்த பிறகு வேலை அனுமதி விசா (Post-Study Work Visa) மூலம் வேலை அனுபவம் பெற முடியும்.
இது புதிய சூழலில் பணிபுரியும் திறனை வளர்க்க மற்றும் உலக சந்தையில் வேலை வாய்ப்புகளை பெற உதவுகிறது.
இதனை உணர்ந்த பல்வேறு நாடுகள் சிறப்பான வேலை அனுமதி திட்டங்களை வழங்கி, சர்வதேச மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
Post-Study Work Visa வழங்கும் 10 நாடுகள்
1. அவுஸ்திரேலியா (Australia)
அவுஸ்திரேலியாவில் Temporary Graduate Visa மூலம் இரண்டு வகை வாய்ப்புகள் உள்ளன.
Post-Vocational Education Work Stream: குறிப்பிட்ட தொழில்களுக்கான படிப்புகளை முடித்தவர்கள் 18 மாதங்கள் வரை தங்கலாம்.
Post-Higher Education Work Stream: அவுஸ்திரேலிய பட்டம் பெற்றவர்களுக்கு 2-3 ஆண்டுகள் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும்.
2. பிரித்தானியா (UK)
Graduate Visa: படிப்பு முடிந்தவர்கள் 2 ஆண்டுகள் தங்கலாம்.
இந்த விசாவை நீட்டிக்க முடியாது, ஆனால் Skilled Worker Visa போன்ற வேறு விசாக்களுக்கு மாற்றலாம்.
3. நியூசிலாந்து (New Zealand)
Post-Study Work Visa: படிப்பு முடித்தவர்களுக்கு 1-3 ஆண்டுகள் எந்த நிறுவனத்திலும் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும்.
Level 7 (Bachelor’s degree) அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை முடித்தவர்கள் அதிகமான வேலை வாய்ப்புகளை பெறலாம்.
4. அயர்லாந்து (Ireland)
Third Level Graduate Programme: Non-EEA மாணவர்கள் 1 வருடம் வரை தங்கலாம்.
அயர்லாந்தில் பல சர்வதேச நிறுவனங்கள் இருப்பதால் வேலை வாய்ப்புகள் அதிகம்.
5. அமெரிக்கா (USA)
Optional Practical Training (OPT): F-1 விசா பெற்ற மாணவர்கள் 12 மாதங்கள் வேலை செய்யலாம்.
STEM மாணவர்களுக்கு 24 மாதங்கள் கூடுதல் நீட்டிப்பு கிடைக்கும்.
H-1B Visa: கற்பித்தல் அல்லது தொழில்முறை வேலைக்கு 6 ஆண்டுகள் வரை அனுமதி வழங்கப்படுகிறது.
6. கனடா (Canada)
Post-Graduation Work Permit (PGWP): 8 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை வேலை செய்யலாம்.
இந்த விசா பெற Designated Learning Institutions (DLI) பட்டியலில் உள்ள கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும்.
7. ஜேர்மனி (Germany)
ஜேர்மனியில் படிப்பு முடித்த பிறகு 18 மாதங்கள் வேலை தேட அனுமதி வழங்கப்படுகிறது.
வேலை கிடைத்தவுடன் EU Blue Card பெற்றுக்கொண்டு மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் வேலை செய்யலாம்.
8. தென் கொரியா (South Korea)
D-10-1 Visa: வேலை தேடும் காலத்திற்காக வழங்கப்படும்.
வேலை கிடைத்தவுடன் E-Series Work Visa எனும் விசாவுக்கு மாறலாம்.
மேலும், E-6 Hallyu Visa மூலம் கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் வேலை செய்யலாம்.
9. சிங்கப்பூர் (Singapore)
Short-Term Visit Pass: படிப்பு முடிந்தவுடன் 90 நாட்கள் வரை தங்க Short-Term Visit Pass வழங்கப்படும்.
Long-Term Social Visit Pass: ஒரு வருட வேலை தேடுவதற்கான விசா.
வேலை கிடைத்தால் Employment Pass / S Pass / EntrePass போன்ற விசாக்களுக்கு மாற்றலாம்.
10. ஃபின்லாந்து (Finland)
Extended Residence Permit: படிப்பு முடிந்த பின் 1 வருடம் வேலை தேட அனுமதி வழங்கப்படும்.
வேலை கிடைத்தவுடன் Work-Based Residence Permit பெறலாம். சில வேலைகளுக்கு ஃபின்னிஷ் அல்லது ஸ்வீடிஷ் மொழி அறிவு தேவையானது.
மேற்கண்ட நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கு படிப்பு முடிந்த பின் வேலை வாய்ப்புகளைத் தந்து, அவர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்றன.
இந்த விசாக்களை பயன்படுத்தி, மாணவர்கள் சிறந்த வேலை அனுபவம் பெறலாம் மற்றும் குடியுரிமை பெறும் வாய்ப்புகளும் உருவாகலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Post-Study Work Visa, 10 countries offering post-study work visas for international Students