இந்தியாவின் முதல் Tesla ஷோரூமில் வேலைவாய்ப்பு.!
பில்லியனர் எலான் மஸ்க்கின் Tesla Inc நிறுவனம் இந்தியாவில் திறக்கப்படும் முதல் ஷோரூமிற்கான பணியமர்த்தல் முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான டெஸ்லா மகாராஷ்டிராவில் 20 காலி பணியிடங்களை பட்டியலிட்டுள்ளது.
இதில் மும்பையில் 15 வேலை வாய்ப்புகளும், புனேவில் 5 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் டெஸ்லாவின் முதல் அலுவலகம்
இந்தியாவில் டெஸ்லாவின் முதல் அலுவலகம் புனேவில் உள்ளது.
Mercedes-Benz, Tata Motors போன்ற பெரிய உற்பத்தியாளர்களுடன் புனே வேகமாக வாகன மையமாக மாறி வருகிறது.
புனே டெஸ்லாவுக்கு ஒரு மூலோபாய இடமாக இருப்பதற்கு இதுவே காரணம்.
டெஸ்லா எதிர்காலத்தில் இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க விரும்புகிறது. இந்த ஆலைக்காக புனேவுக்கு அருகிலுள்ள சக்கன் மற்றும் சிகாலியில் உள்ள இடங்களை அரசாங்க அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் முதல் ஷோரூம்
டெஸ்லா தனது முதல் ஷோரூமை இந்தியாவில் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) திறக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் சமீபத்தில் இறுதி செய்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் BKCயில் உள்ள ஒரு வணிக கோபுரத்தின் தரை தளத்தில் 4,000 சதுர அடி இடத்தை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கே ஒரு சதுர அடிக்கு சுமார் 900 ரூபாய் அல்லது இந்த இடத்திற்கு சுமார் 35 லட்சம் ரூபாய் மாத குத்தகை வாடகை செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
டெஸ்லாவின் அடுத்த ஷோரூமை டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |