பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி பங்கேற்றது புதிய சர்ச்சையை கிளப்பியயுள்ளது.
2026 T20 உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இடையே கொழும்பில் நடைபெற்றது.
அந்த போட்டியை, இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சோக் குப்தா நேரில் பார்த்தது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
பொதுவாக ICC அதிகாரிகள் போட்டிகளில் பங்கேற்பது சாதாரணமாக இருந்தாலும், சமீபத்தில் பாகிஸ்தான் தொடர்பான பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், குப்தாவின் பங்கேற்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தான் அரசு இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளதால், இந்த நிகழ்வு மேலும் பேசுபொருளாகியுள்ளது.
குப்தா பாகிஸ்தான் அணியினருடன் நேரடியாக உரையாடுவதற்காகவே போட்டியில் பங்கேற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதற்கு முன்னர், வங்காளதேசம் பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவிற்கு பயணம் செய்ய மறுத்ததால், அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணியை மாற்றாக சேர்க்க ICC முடிவு செய்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) “Force Majeure” விதியை பயன்படுத்தி, இந்தியாவிற்கு எதிரான போட்டியை தவிர்க்க முயற்சித்துள்ளது. ஆனால், ICC, “ஒரு குறிப்பிட்ட போட்டியை மட்டும் தவிர்த்து மற்ற போட்டிகளில் பங்கேற்பது விதிமுறைகளுக்கு முரணானது” என்று எச்சரித்துள்ளது.
சஞ்சோக் குப்தாவின் பங்கேற்பு, இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா இல்லையா என்ற கேள்வியைச் சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ICC Indian official Pakistan T20 World Cup, ICC India official spotted Pakistan cricket, Pakistan T20 World Cup ICC official buzz, ICC India Pakistan cricket controversy, Indian ICC executive at Pakistan match, India Pakistan cricket, T20 World Cup, Sanjog Gupta