தலிபான் தலைவர்களை கைது செய்ய உத்தரவு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை
தலிபான் தலைவர்கள் மீது கைது உத்தரவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தலிபான் தலைவர்கள் கைது
பெண்கள் மீதான தீவிர குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு தலிபான் தலைவர்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நடவடிக்கை எடுத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நீடித்து வரும் மனித உரிமை மீறல்களை இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.
ICC prosecutors have requested arrest warrants for Taliban leaders
— NEXTA (@nexta_tv) January 23, 2025
CNN reports that the International Criminal Court (ICC) is seeking arrest warrants for Taliban leaders for alleged gender-based crimes as the movement continues to violate women's rights in Afghanistan.
“The… pic.twitter.com/D743GrrKUh
கைது நடவடிக்கை சாத்தியமாகுமா?
ஹைபத்துல்லாஹ் அகுந்த்சாதா(Haibatullah Akhundzada) போன்ற முக்கிய தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே செல்வது அரிதாக இருப்பதால், இந்த கைது உத்தரவுகளை நடைமுறைப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
தலிபானின் கொள்கைகள் குறித்து சர்வதேச சமூகம் அதிகரித்து வரும் அச்சத்தை ICC-யின் நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன.
2024 ஆம் ஆண்டு டிசம்பரில் ரஷ்யா தலிபானை தனது பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கியது போன்ற உலகளாவிய அளவில் தலிபானைப் பற்றிய கண்ணோட்டங்கள் மாறிவரும் நிலையில் இந்த நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |