அமைதி ஒப்பந்தத்திற்கு மத்தியில்., லெபனானில் 50 க்கும் ஏற்பட்ட இலக்குகள் அழிப்பு
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
50 க்கும் ஏற்பட்ட இலக்குகள் அழிப்பு
லெபனான் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில், அதை மீறி கடந்த 2 நாட்களில் மட்டும் லெபனானில் 50க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
IDF திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், லெபனானில் இருந்து ஏற்பட இருக்கும் உடனடி அச்சுறுத்தல்களை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் சுரங்க வளாகம் ஒன்றும் அழிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த சுரங்க வளாகம் இஸ்ரேலிய பகுதி மற்றும் அங்கு நிலைநிறுத்தப்பட்ட இஸ்ரேலிய படையினரை குறிவைத்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக IDF அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆயுத குவியல் கண்டுபிடிப்பு
மேலும் தெற்கு லெபனானின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேலிய படையினர் நடத்திய அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, குடியிருப்பு ஒன்றில் குழந்தை படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல் ஒன்றை இஸ்ரேலிய ராணுவத்தினர் கண்டுபிடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடவடிக்கைக்கு இஸ்ரேல் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |