காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதக் தளபதி: இஸ்ரேலிய ராணுவம் அறிவிப்பு
IDF Killed Hamas Weapons commander in Gaza : காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் ஆயுதத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கொல்லப்பட்ட ஹமாஸின் ராணுவ தளபதி
காசாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ஆயுத விநியோகத் தளபதி அம்ர் முகமது ருஷ்டி சராக்(Amr Muhammad Rushdi Sarrag) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
காசாவின் சப்ரா(Sabra) நகரில் திங்கட்கிழமை இஸ்ரேலிய படைகள் நடத்திய துல்லியமான தாக்குதலில் ஆயுத விநியோகத் தளபதி அம்ர் முகமது ருஷ்டி சராக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவை சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியும் தாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் விளக்கம்
இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பில், கொல்லப்பட்ட இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நாட்டு மக்கள் மீதும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்த சதி திட்டங்களை செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி ஹமாஸ் அமைப்பின் பலத்தை மீட்டெடுக்க தீவிரமாக முயற்சி செய்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |