லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழப்பு
40-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வெளியிட்ட தகவலில், ஹிஸ்புல்லா திறனை கட்டுப்படுத்தும் முயற்சியாக இஸ்ரேலிய ராணுவம் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என முப்படை தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவின் மூலோபாய இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஆயுதக் கிடங்குகள், ஏவுதளங்கள் மற்றும் ஏவுகணை நிலைகள் என டஜன் கணக்கான இடங்கள் இதில் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் 146 மற்றும் 162 வது படைப் பிரிவுகளை சேர்ந்த இஸ்ரேலிய இராணுவ படை வீரர்கள் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதக் குவியல்களை தேடி தெற்கு லெபனான் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |