எண்ணெய் விநியோக நெருக்கடி: சிகப்பு மண்டலத்திற்கு செல்லும் அபாயம்: IEA எச்சரிக்கை
ஈரான் - அமெரிக்கா போர் நடவடிக்கை காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோக நெருக்கடி சிவப்பு அபாய எல்லைக்குள் செல்லும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து உலகின் முக்கிய நீர் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அதிரடியாக மூடியுள்ளது.
இதனால் உலக அளவில் எண்ணெய் விநியோகம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் வரும் காலங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையும் என்று சர்வதேச எரிசக்தி முகமை(IEA) நிர்வாக இயக்குநர் பாத்திஹ் பிரோல் எச்சரித்துள்ளார்.

அதில், மத்திய கிழக்கில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் ஏற்றுமதி வரலாறு காணாத அளவு சரிந்துள்ள நிலையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உலகளாவிய எண்ணெய் சந்தை ஆபத்தான சிவப்பு மண்டலத்திற்குள்(Red Zone) செல்லும் என்று எச்சரித்துள்ளார்.
தற்போதைய மோசமான நிலை காரணமாக எண்ணெய் சந்தையில் கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 14 மில்லியன் பீப்பாய் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் IEA தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீடு செய்வதில் ஏற்படும் சிரமம்

தற்போதைய இக்கட்டான சூழ்நிலை காரணமாக ஈராக் போன்ற எண்ணெய் பொருளாதார நாடுகள் கடும் நிதி இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிதி இழப்புகள் காரணமாக இந்த நாடுகள் மீண்டும் எரிசக்தி துறையில் முதலீடு செய்ய சிரமப்படும் என்றும் பாத்திஹ் பிரோல் எச்சரித்துள்ளார்.
அதைப்போல ஐக்கிர அரபு அமீரகம் போன்ற நாடுகளும் தங்களுடைய எண்ணெய் உற்பத்தியை ஒராண்டுக்கு முன்னதாக தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் உருவாகி வரும் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தேவையான மாற்று எரிசக்தி ஆதாரங்களை ஆராயுமாறு பிரதமர் நரேந்திர மோடி அரசு துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |