நடிகர் விஜயும் மாமன், மச்சான் தான்.., அவர் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம் என அண்ணாமலை பேச்சு
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பாஜகவின் மாமன் மச்சன் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை பேசியது
பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். தற்போது அந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி.
அத்திக்கடவு - அவிநாசி 2-வது திட்டத்தை துவங்க வேண்டும். அணில் போல பாஜக வேலை செய்திருக்கிறோம். ஆனைமலை நல்லாறு திட்டம் மற்றும் பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தையும் அரசு கொண்டுவர வேண்டும்.
கருணாநிதியை கும்பிடுவது தவறில்லை, ஒருவரது காலில் விழுவது தான் தவறு. முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி. உதயகுமார் சசிகலா முன்பு எவ்வாறு நிற்பார் என்பது தெரியும்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும்போது கருணாநிதிக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தவே நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
பொறாமை, பகை, தரக்குறைவான பேச்சு.., சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு
ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே நான் தரகர் வேலை பார்ப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். கள்ள உறவு என்று கொச்சையாக பேசுகிறார். ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி போன்று அவர் பேசவில்லை.
பாஜகவின் கூட்டணி என்பது மாமன், மச்சான் போன்றது. நடிகர் விஜயும் மாமன் - மச்சான் தான். அவர் எங்களது கூட்டணிக்கு வந்தால் ஏற்போம்,” என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |