சீனாவின் அந்த ஒரு நகர்வு... அமெரிக்காவிற்கு பேரிழப்பை ஏற்படுத்தும்
சீனா தைவானை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தால் அமெரிக்கா ஆயிரக்கணக்கான வீரர்களையும், நூற்றுக்கணக்கான விமானங்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும், விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்பட டசின் கணக்கான கப்பல்களையும் இழக்க நேரிடும் என்றே கூறப்படுகிறது.
கடற்படை முற்றுகை
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா சிக்கக்கூடும் என்றும் அதன் இழப்புகள் விரைவாகவே அதிகரிக்கக்கூடும் என்றும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ஹிட்லருடன் ஒப்பிட்ட தைவான், தங்கள் நாட்டை முற்றுகையிட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா தொடர்பில் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
தைவானை கைப்பற்றுவதற்கான முதல் படி சீன கடற்படை முற்றுகையாக இருக்கலாம் என்றும் அது இரண்டு ஆண்டுகளுக்குள் நிகழலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது. மட்டுமின்றி, அமெரிக்கா தயாரிக்கும் ஒவ்வொரு போர்க்கப்பலுக்கும் ஈடாக சீனா தற்போது மூன்று போர்க்கப்பல்களை உருவாக்கி வருகிறது.
மேலும், உடனடி முழு அளவிலான படையெடுப்பிற்குப் பதிலாக, ஒரு முற்றுகை, தைவானை அடிபணிய வைக்கும் என்றும், முற்றுகையிடப்பட்ட தீவு நாட்டிலிருந்து ஒரு மில்லியன் வெளிநாட்டினரை வெளியேற்றுவதற்கான ஒரு அவசர நடவடிக்கை கடும் நெருக்கடியை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், சீனாவின் முற்றுகையை இராணுவ ரீதியாக உடைக்க, அல்லது தைவானை அதன் தலைவிதிக்கே விட்டுவிடலாமா என்ற மகத்தான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்கொள்ள நேரிடும்.
இந்தச் சூழலில், நிபுணர்கள் தரப்பு சீன - அமெரிக்கா போர் தொடர்பில் 26 வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளனர். இதில் மிக மோசமான சூழல் என்பது, சீனாவின் முற்றுகையை முறியடிக்க முடிவு செய்து களத்தில் இறங்கும் அமெரிக்காவிற்கு 21,000 வீரர்கள், 45 போர் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கும் கப்பல்கள், 2 நீர்மூழ்கிகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட போர் விமானங்களின் இழப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேவேளை, சீனா 13,000 வீரர்கள், 42 நீர்மூழ்கிகள், கிட்டத்தட்ட 100 கப்பல்கள் மற்றும் சுமார் 1000 போர் விமானங்களை இழக்கும் நிலை ஏற்படும். வெற்றிகரமான தாக்குதல் என்பது அதிக இழப்புகளை ஏற்படுத்தும் என்றே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருபோதும் கைவிடவில்லை
போர் உக்கிரமடைந்தால், அது அமெரிக்காவிற்கே பேரிழப்பாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் இழப்புகளும் அதிகமாக இருக்கும், பெரும்பாலும் அமெரிக்காவை விட மோசமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் பாதுகாப்பான தாய்நாடும் அணு ஆயுதங்களும் இருக்கும்போது முழுமையான வெற்றியை அடைய முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 600 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது.
சீனா தைவானை தனது பிரதேசமாகக் குறிப்பிட்டு வந்தாலும் அதைக் கைப்பற்றுவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதை ஒருபோதும் கைவிடவில்லை. அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில்,
2027 ஆம் ஆண்டு முதல் தைவான் மீது படையெடுக்கும் ஒரு சாத்தியமான உத்தரவிற்கு தயாராக இருக்குமாறு ஜனாதிபதி ஜி தனது தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தைவான் மீது படையெடுப்பு நடக்க வாய்ப்பு உள்ளது என்றே அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சீன இராணுவம் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதுடன், தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனக் கப்பல்கள் பயிற்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |