அமெரிக்கா இனி தேவையில்லாமல் இதில் தலையிட்டால்... இது தான் நடக்கும்! எச்சரிக்கும் சீனா
அமெரிக்கா உள்நாட்டு விவகாரங்களில் இனி தலையிட வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த வருகிறது
. இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தற்போது அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், ஆசிய பிரதேசத்தில் தொடர்ந்து அண்டை நாடுகளுடன் சீனா மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா இந்த விவகாரத்தில் அடிக்கடி தலையிடுவதால், இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதனால் தற்போது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ, பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராகத்தான் உள்ளது.
ஆனால் அது அனைத்து நாடுகளும் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தங்களை உலகின் மிகப்பெரிய நாடு(அமெரிக்கா) என்று கூறும் எந்த நாட்டின் கருத்தையும் சீனா ஏற்றுக்கொள்ளாது. மேலும் உலக விவகாரங்களில் அமெரிக்கா அதிகமாக தலையிடுகிறது.
சீனாவின் அண்டை நாடுகளுடனான உறவில் அமெரிக்கா இதேபோல மீண்டும் மீண்டும் தலையிட்டால் அதனை சீனா தைரியமாக எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளார்.
பொய்யான கருத்துக்கள் மூலமாக சீனாவுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது கூடாது, சமீபத்திய ஹோங்ஹோங் மற்றும் தைவான் பிரச்னைகள், ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இஸ்லாமிய பழங்குடி இன மக்கள் விவகாரம் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.
இனி இதுபோன்ற விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று வாங் இ கூறியுள்ளார்.
