கோடை காலத்தில் எனக்காக வாங்கிய AC.., குடிமைப் பணி அதிகாரி நெகிழ்ச்சி
தான் இந்திய வனத்துறை அதிகாரியாக உயர தனது நடுத்தர வர்க்க பெற்றோர் செய்த தியாகமே காரணம் என்று குடிமைப்பணி அதிகாரி ஒருவர் கூறிய பதிவு வைரலாகி வருகிறது.
பொதுவாகவே இந்திய பெற்றோர்கள் தாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று, தங்களுடைய குழந்தைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கும்.
அந்தவகையில் டெல்லியை சேர்ந்த இளம் குடிமை பணி அதிகாரியாக உயர தனது பெற்றோர் செய்த தியாகம் குறித்து இந்திய வனத்துறை அதிகாரி அனுபம் ஷர்மா நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
IFS அதிகாரியின் பதிவு
இந்திய வனத்துறை அதிகாரி அனுபம் ஷர்மா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "10 ஆண்டுகளுக்கு முன்பு 2014 ம் ஆண்டு எனது பெற்றோர் வாங்கிய ஒரே ஏசி இதுதான்.
கோடைக்காலத்தின் வெக்கையில் கஷ்டப்படாமல் நான் சவுகரியமாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்பதற்காக எனது அறையில் இந்த ஏசியை பெற்றோர் பொருத்தினார்கள்.
This is the only AC my parents had ever purchased, ~10 years back in 2014.
— Anupam Sharma, IFS (@AnupamSharmaIFS) April 7, 2024
It was installed in my room, so that I can prepare for competitive exams with greater comfort & focus in summers?.
Just a glimpse of efforts put in by middle-class parents for their children's future. pic.twitter.com/ehrszbiDKK
நடுத்தர வர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எடுக்கும் முயற்சியை இன்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்" என்று ஏசியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |