இளையராஜாவின் பாடல்களால் வருமானம் ஈட்டிய Sony Music - சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இளையராஜாவின் பாடல்கள் மூலம் ஈட்டிய வருமானம் குறித்த முழு விவரங்களை சமர்ப்பிக்க Sony Music நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான இளையராஜா, தனது இசைப்பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக Sony Music Entertainment India Pvt Ltd மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த Echo Recording Company-யின் துணை நிறுவனமான Oriental Records மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இளையராஜா தனது மனுவில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல் அமொழிகளில் 7,500-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களுக்கு இடை அமைந்துள்ளதாகவும், அவை அனைத்தும் பதிப்புரிமை சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்டவை என்றும், அந்த உரிமைகள் தனக்கே சொந்தமானவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Sony உள்ளிட்ட நிறுவனங்கள், இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அவரது அனுமதி இல்லாமல் பாடல்களை மாற்றி, பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Sony நிறுவனம் Echo Recording Company-இடமிருந்து பாடல்களை வாங்கியதாக கூறினாலும், அவற்றை பயன்படுத்தக்கூடாது என ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவு இருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
Sony மட்டும் அதன் கூட்டாளிகள் சட்டவிரோதமாக பாடல்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிபதி என்.செந்தில்குமார், Sony நிறுவனம் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தி எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளது, அதன் செலவுகள் உள்ளிட்ட முழு விவரங்களையும் அக்டோபர் 22-ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |