ரோபோ ஷங்கர் இளவயதிலே உயிரிழந்ததன் காரணம் என்ன? வெளியான பகீர் பின்னணி
ரோபோ ஷங்கர் இளவயதிலே உடல் பாதிக்கப்பட்டதன் காரணத்தை நடிகர் இளவரசு பகிர்ந்துள்ளார்.
ரோபோ ஷங்கர் மரணம்
பிரபல நடிகர் ரோபோ சங்கர், கடந்த 16 ஆம் திகதி படப்பிடிப்பில் இருந்த போது, மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்த போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஏற்கனவே மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
46 வயதிலே அவர் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
காரணம் என்ன?
ரோபோ ஷங்கரின் உயிரிழப்புக்கான காரணம் ஒன்றை நடிகர் இளவரசு பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ஆரம்ப காலத்தில் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு நடன மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் கலந்து கொள்வார். உடலில் உள்ள அந்த பெயிண்ட்டை அகற்றுவதற்கு மண்ணெண்ணெய் ஊற்றி அதனை துடைப்பார்கள்.
தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் பட்டதன் காரணமாக அவரது தோள் வலுவிழந்துள்ளது.
இதில் ஏற்பட்ட குறைபாடுகளால்தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது. இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு இதுதான் காரணம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |