பவதாரணி காந்த குரலில் என்றென்றும் ஒலிக்கும் பாடல்கள்
இசைஞானி இளையராஜாவின் மகளான மற்றும் பிரபல இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரலில் வெளியான பாடல்களில் மறக்க முடியாத சில பாடல்கள் தற்போது வைரலாகி வருகிறது.
குயில் போன்ற குரல்
இசை என்றாலே எந்தவொரு உயிராக இருந்தாலும் கட்டாயம் அடிமையாகிவிடும். அதிலும் ஒரு சில இசை மற்றும் ஒரு சில பாடகர்களின் குரல் பலரையும் மயக்கும்.
அந்தவகையில் அனைவராலும் அதிகமாக விரும்பப்பட்ட குரல் என்றால் அது இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரணியின் குரலாக தான் இருக்கும்.
அவருடைய குரலானது தனித்துவம் நிறைந்த ஒரு அழகிய குரலாகும். அவருடைய குரலை யாராக இருந்தாலும் சரி இலகுவில் கண்டுப்பிடிப்பார்கள்.
அவர் பாடிய பாடல்களின் முதல் 10 பாடங்களை பற்றி பார்க்கலாம்.
மறக்க முடியாத 10 பாடல்கள்
1. மஸ்தானா, மஸ்தானா
1995ல் வெளியான ராசய்யா படத்தில் அவர் பாடிய மஸ்தானா, மஸ்தானா பாடல் அனைவராலும் அதிக கேட்கப்பட்டது. இந்த பாடலானது நல்ல வரவெற்பை பெறாமல் இருந்தாலும், பவதாரிணியின் குரல் அனைவரையும் ஈர்த்துள்ளது.
2. நதியோடு வீசும் தென்றல்
1995ல் விஜயகாந்த் சங்கீதா நடித்து வெளியான படத்தில் இவர் பாடிய, நதியோடு வீசும் தென்றல் மலரோடு பேசுமா, மலராத பூக்கள் இன்று அதைக் கேட்கக்கூடுமா?" என்ற பாடல் அனைவராலும் இன்றுவரையில் ஒலித்துக்கொண்டு இருகிறது.
3. ஒரு சின்ன மணிக் குயிலு
1996ல் கட்டப் பஞ்சாயத்து என்று ஒரு படத்தின் மூலம் வெளியான ஒரு சின்ன மணிக் குயிலு என்ற பாடல் அனைவராலும் இன்றுவரையில் புதிது போன்று கேட்கப்படுகிறது.
4. இது சங்கீதத் திருநாளோ
1997ஆம் ஆண்டில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் "இது சங்கீதத் திருநாளோ" என்ற பாடலின் ஊடாக பவதாரிணியின் குரல் ஒலித்துக் கொண்டு இருகிறது.
5. என் வீட்டு ஜன்னல் எட்டி
1997ல் வெளிவந்த ராமன் அப்துல்லா படத்தின் மூலம் வெளியான என் வீட்டு ஜன்னல் எட்டி என்ற பாடலால் இந்த படமே அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்டது. ஆனால் படம் பெரியளவில் வெற்றிப் பெறவில்லை.
6. தவிக்கிறேன்.. தவிக்கிறேன்
1999ல் வெளிவந்த டைம் படத்தின் மூலம் வெளியான தவிக்கிறேன்.. தவிக்கிறேன் என்ற இந்த பாடல் எல்லோர் மனதிலும் தங்கிவிட்டது. இந்த பாடலை இன்று வரையில் வீடியோ காட்சி இல்லாமல் பலரும் கேட்டு வருகின்றனர்.
7. மயில் போல பொண்ணு ஒன்னு
2000வது ஆண்டில் வெளியான பாரதி படத்தின் 9ஆவது பாடலான மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் நீண்ட மயக்கத்தை தந்தது. இந்த பாடல் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணிக்குப் பெற்றுத் தந்தது.
8. தென்றல் வரும் வழியை
2001ல் வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தில் ஹரிஹரனுடன் இணைந்து தென்றல் வரும் வழியை என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் இடையில் வரும் ஹம்மிங் சத்தமும் பெரியளவில் பேசப்பட்டது.
9. காற்றில் வரும் கீதமே
ஒரு நாள் ஒரு கனவு படத்தில் மூலம் வெளியான காற்றில் வரும் கீதமே என்ற பாடலை இவர் பாடியுள்ளார். இந்த பாடலானது ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் போன்றோரும் இணைந்து பாடியிருந்தாலும் பவதாரிணியின் குரல் தனித்து கேட்டுக்கொண்டே இருக்கும்.
10. தாலியே தேவையில்லை
2006ல் வெளிவந்த தாமிரபரணி படத்தில், தாலியே தேவையில்லை என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலானது இன்று வரையில் இளைஞர்கள் மத்தியில் கேட்கப்படுகிறது எனலாம்.
பாடுவதையும் தவிர்த்து இவரின் ஹம்மிங் சத்தம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. காதலுக்கு மரியாதை படத்தில் 'தாலாட்ட வருவாளா.." பாடலிலும் "முத்தே முத்தமா.." பாடலிலும் "தென்றல் வரும் வழியில்" பாடலிலும் இவரது ஹம்மிங் அனைவரையும் ஈர்த்தது.
பவதாரிணி இவ்வுலகை விட்டு சென்றாலும் அவரது இனிமையான குரலில் பாடிய ஒவ்வொரு பாடல்களும் இவ் இசையுலகில் என்றும் அழியாது உயிருடனே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |