இல்லினாய்ஸ் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: அதிர்ச்சியூட்டும் கமெரா காட்சிகள் வெளியீடு
தன்னுடைய வீட்டில் யாரோ புகுந்துவிட்டதாக 911 க்கு அழைப்பு விடுத்த பெண்ணை அவரது வீட்டிலேயே பொலிஸார் சுட்டுக் கொன்ற நிலையில், இல்லினாய்ஸ் காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான கமெரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
கமெரா காட்சிகள் வெளியீடு
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் காவல்துறை அதிகாரிகள், 4ம் ஜூலை வார இறுதியில் 36 வயதான சோனியா மாசி(Sonya Massey) என்ற பெண்ணை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு முன்னதாக ஏற்பட்ட குழப்பமான தருணங்கள் குறித்து பதிவு செய்த கமெரா காட்சிகளை வெளியிட்டுள்ளார்கள்.
வீட்டிற்குள் புகுந்த நபர் தொடர்பான சந்தேகத்தால் 911 ஐ அழைத்த அந்த பெண்ணை சுட்டுக் கொன்ற இந்த சம்பவம் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டதுடன், நிர்வாகத்திடமிருந்து கண்டனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட சங்கமோன் கவுண்டி ஷெரீப் துணை அதிகாரி ஷான் கிரேசன்(Sangamon County Sheriff's Deputy Sean Grayson) காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டு கொலை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
திங்கட்கிழமை, இல்லினாய்ஸ் மாநில காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட Bodycam Footage, பொலிஸ் அதிகாரி துப்பாக்கிகளை காட்டி கொதிக்கும் நீரை கீழே வைக்குமாறு மாசி அவர்களிடம் கத்தி எச்சரிப்பதை பார்க்க முடிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்காக மனம் உடைந்து போனதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |