தமிழகத்தில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
லட்சத்தீவு பகுதியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
File
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும், ஒருசில இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
PTI
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |