வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் நாளை மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரைக்கு அருகில் நகரக்கூடும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |